Sunday, February 5, 2012

வெறும் வார்த்தைகள்

தெளிவாய் ஏதும் தோன்றாதபோது எதையாவது பேசுவோம், எழுதுவோமென்று மட்டும் தோன்றும். கேட்பவரை , வாசிப்பவரை ஈர்க்க வேண்டும். கருத்துள்ளதாக இருக்கிறதோ இல்லையோ, கவர்வதாக இருக்கவேண்டும். கருத்தாக இருந்தால் வார்த்தைகளுக்கான தேடலிருக்காது. கவர்வதாக இருந்தால் தேடல் ஆராய்ச்சியையும் விஞ்சும். வார்த்தைகள் இன்று பேசப்படுவதைவிட தட்டப்படுகிறது. பெயர், ஊர், முகம், ஏதும் தேவையில்லை, வெறும் 'கருத்துப்பரிமாற்றம்'. இதயத்திலிருந்து அல்லாமல் விரல்களில் இருந்து  வரும் 'வெறும் வார்த்தைகள்'. உயிரற்ற வார்த்தைகள். கருத்துக்கள் யாவும் கவர்வதில்லை, கவர்பவையாவும் கருத்துக்களில்லை. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்தப்போக்கு வரவேர்கத்தக்கதாய் தோன்றினாலும், இது தேவைதானா என்ற நெருடலும் எழுகிறது.

உதிரும் வார்த்தைகள் யாவும் பெட்டகங்கள் ஆகலாம், குப்பைத்தொட்டிக்கும் போகலாம். உதிர்வது என்றும் அதன் இயல்பு நிலைக்கு திரும்புவதில்லை. இதை அறிந்தவர்கள் என்றுமே பக்குவமாய் கையாள்கிறார்கள், மிஞ்சியவர்கள் நிலை நாம் அறிந்ததே. வார்த்தைகளின் உறுதி போய்ச்சேருபவரையும் தானாக பாவிக்கிறது- உறுதியடைகிறார்கள். வார்த்தைகளின் வசியம் மற்றவராகவே பாவிக்கிறது- மயங்கச் செய்கிறது மண்ணாக்குகிறது.

2 comments:

  1. திணிக்கப்படும் ஜிகினா வார்த்தைகள் இல்லாமல்,இயல்பான உணர்வுகாட்டும் வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன் # மழைக்காக காத்திருக்கும் மண் போல!

    ReplyDelete