Monday, December 20, 2010

A Prayer To Lord The Almighty.

இறைவனுகோர் வேண்டுதல்

மனிதனாக பிறந்ததற்கு,
மனம்போல் வாழநினைத்து...உணர்வுகளேதும்
மனதையோ சரிரத்தையோ பாதிக்காதென்றால்
மனிதப்பிறவியின் முழுமை தெய்வமாக மாறுவதிலா?
என் இறைவா!
என் நிலையை உன்னளவு உயர்த்துவதென்பது
என் ஜென்மமுடிவிலும் கடனே.
இப்பிறவி இன்பம் இதுவென்ருனர்த்துவாய். 
இகழ்ச்சியோ, புகழ்ச்சியோ
இவையேதும் என் சிரம், அகம் தாக்காதென்றுனர்த்துவாய்   . 

கர்மத்திற்கு விளைவுகள் நியதியே- இதில் 
உயர்வென்ன? தாழ்வென்ன?
என் மனக்கண்களின் பார்வையை சிர்செய்வயாக.
உன் பார்வையில் யாவரும் சமம்தானே?
உன் கடைக்கண் அளவாவது நானும் தொடர
உன் பார்வையை என்மேல் பதிவாயாக.
இறுதியாய் வேண்டும் வேண்டும் என வேண்டும்
என் மனதில் இவையேதும் வேண்டாம்
என்னும் மனநிலையை வேண்டுகிறேன்.

The Nature Within Human

இயற்கை
 
 எட்டு மாதக் குழந்தை
ஆரோக்கியமாக,
பதினாறு இருபதுகளின்
கவிதையில்
காதலன்றி பொதுநலத்தின்
பிரதிபளிப்பு,
பழுத்த மனிதனின்
கடுமையான உழைப்பு,
இவை அசாதாரனகள்.
இவர்களே சாதனையாளர்கள்!
இயற்கைக்கு மாறானவைகளா 
சாதனைகள் ? - இல்லை 
இவைகளும் இயற்கையே.