Monday, May 23, 2011

காலமே கடவுள்

காலமே கடவுள்.
காலமே கடவுள். 
காலமே கடவுள்.
சூழ்ல்நிலைப்பிடியில் சிக்கிய எவருக்கும் 
இந்த்ச்சூத்திரம் புரியும்.
பிறர் வாட பல செயலும் புரியவில்லை 
பிறர் வாழ பல செயலும் புரியவில்லை.
எனக்கான சுதந்திர வாழ்க்கையை வாழ்கிறேன்.
முழுவதுமாகவா? என்றால்- இல்லை.
பாராட்டுகளுக்கும் பழிகளுக்கும் அஞ்சியே இந்தப் 
பாரில் வாழ்க்கை முடிகிறது.
எவருக்கும் உண்மையாக வாழ்கிறேனென்று 
நிருபிக்க வேண்டியதில்லை.
என் போக்கில் சத்தியத்தை கடைபிடிப்பேன்- இது
நிதர்சனமான சத்தியம்.
நானே நேர்மையனவனென்று 
அக்மார்க் சான்றிதழை யாருக்கும் கொடுக்க இயலாது.
உன்னை பற்றி நான் தீர்மானிக்கிறேன் 
என்னை பற்றி நீ தீர்மானம் செய்.
இதன் முடிவில் யார் யோக்கியன்?
இந்தப் போழிச் சான்றிதழ்காய் ஏங்கும் மனம்.
நாக்கு வழிக்க உபயோகமில்லாத எதன் பின்னாலோ 
நாயாய் நாக்கைத் தொங்கவிட்டு ஓடுகிறோம்.
புகழை பெருமையுடன் ஏற்றுகொள்ளும் மனம்,
பழியை அதே மனதுடன் ஏற்க மறுபத்தால்
ஏற்படும் மனக்கசப்பு- சொந்தம், நட்புவட்டம் 
எல்லோரையும் பகையாய் பார்க்கிறது.
காலம் கனிய காத்திராத போது இது 
நிகழ்கிறது. இறுதியில்-
எல்லாம் கடந்து போகும்.