Wednesday, December 29, 2010

பிஞ்சிலே பழுத்த பழம்


பிஞ்சிலே பழுத்த பழம்

கம்பீரமான கட்டிடம் பெயர் பலகையில்
'பட்டாசு தொழிற்சாலை'
கொத்தடிமை கூடமா? தொழிற்சாலையா?
இச்சந்தேகம் எழுந்தது என் மனதில்.
கையில் மைகரைக்கு  மாறாக மருந்துக்கரை
உடல்பயிற்சியின்றி மெலிந்த பிஞ்சு உடல்கள் 
அறிவின் சின்னமான ஒளிவட்டம் 
கருவளையமாய் அவர்கள் கண்களைச் சுற்றி 
அவர்களின் இயலாமையை வேகக்குறைவால்
தெரியப்படுத்த 
குருதி அருவியாய் கொட்டியது  அவன் 
அடித்த வேகத்தில் 
விழுந்த அடி அத் தலையை மட்டுமல்ல 
என் நெஞ்சையும் வலிக்கச் செய்தது
இயந்திரத்தை பழுது பார்க்க நான்- உங்கள்
இதயத்தின் அரக்கத்தனத்தை பழுது பார்ப்பது யார்?
பிஞ்சிலே பழுத்த பழங்களாய் இத்தனை குழந்தைகளா ?
கனத்துடன் வெளியேறினேன் 
பை கனத்தது பணமாய் என் 
மனம் கனத்தது பிணமாய்.