Friday, June 3, 2011

மௌனத்தின் முகம்

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் 
இடையே நின்றபோது குயிலோ, கிளியோ 
இரைச்சளுடினாலும் மௌனமாய் 
ரசிக்கத் தோன்றும்.

அன்புகொண்ட இருவர் நெடுநாள் சென்று
அருகில் நிற்கும்போது துளி கண்ணீருடன் 
அழுதாலும் மௌனமாய் 
ரசிக்கத் தோன்றும்.

வாசிக்கும் புத்தகத்தில் இதுதான் நமக்கான 
வரிகளென்று உணரும் வேளையில் 
விரல்களினால் மௌனமாய் 
ரசிக்கத் தோன்றும்.

மௌனத்தின் தருணங்கள் அழகானவையாகவே 
காட்சி தருவது வாழ்கையின் 
சுவாரஸிய தருணங்களே- ஆனால் 
மௌனத்திற்கும் முகங்கள் உண்டு.

பேச இயலாதோரின் மௌனத்தில் அர்த்தங்கள் புதைந்திருக்கிறது.
ஏனோ இயன்றோரின் மௌனம் இதயத்தை பிசைகிறது.
வார்த்தைகளால் சுடுவதைவிட மௌனம் தரும் 
காயத்திற்கு ஆழம் அதிகம்.

விரும்பி ஏற்போருக்கு 
மௌனம் ஒழித்து வைத்திருக்கும் ரகசியம் 
பொக்கிஷம்- மற்றோருக்கு 
கொடிவிஷம்.

7 comments:

  1. Thank you for your responds. so now you have changed your user name it seems.

    ReplyDelete
  2. அன்புகொண்ட இருவர் நெடுனாள்ச்சென்று
    அருகில் நிற்கும்போது துளி கண்ணீருடன்
    அழுதாலும் மௌனமாய்
    ரசிக்கத் தோன்றும்.
    Nice lines... gud keep it up

    ReplyDelete