பிஞ்சிலே பழுத்த பழம்
கம்பீரமான கட்டிடம் பெயர் பலகையில்
'பட்டாசு தொழிற்சாலை'
கொத்தடிமை கூடமா? தொழிற்சாலையா?
இச்சந்தேகம் எழுந்தது என் மனதில்.
கையில் மைகரைக்கு மாறாக மருந்துக்கரை
உடல்பயிற்சியின்றி மெலிந்த பிஞ்சு உடல்கள்
அறிவின் சின்னமான ஒளிவட்டம்
கருவளையமாய் அவர்கள் கண்களைச் சுற்றி
அவர்களின் இயலாமையை வேகக்குறைவால்
தெரியப்படுத்த
குருதி அருவியாய் கொட்டியது அவன்
அடித்த வேகத்தில்
விழுந்த அடி அத் தலையை மட்டுமல்ல
என் நெஞ்சையும் வலிக்கச் செய்தது
இயந்திரத்தை பழுது பார்க்க நான்- உங்கள்
இதயத்தின் அரக்கத்தனத்தை பழுது பார்ப்பது யார்?
பிஞ்சிலே பழுத்த பழங்களாய் இத்தனை குழந்தைகளா ?
கனத்துடன் வெளியேறினேன்
பை கனத்தது பணமாய் என்
மனம் கனத்தது பிணமாய்.
Hi Padma, thanks for your words in my blog. Pity that I don't read Tamil, but I find your Tamil poems aesthetically pleasing, and the English ones are great too :). Anu from Finland
ReplyDeleteWonderful poem with fine images to express the poignance of children employed in crackers-manufacturing units. I wish you would write more.
ReplyDeleteஅழுத்தப்பட்ட சூழலில் வாழும் சிறார்கள் பற்றிய தங்கள் பார்வையும், பதிவும் வரவேற்க்கத்தக்கது.
ReplyDeletethank you. at least in this way we get an opportunity to shed about them...
ReplyDelete