'முயற்சிகள் செய்தால் முடியாதா?'
பள்ளி பாடம் சொல்லியது,
பயின்றபோதிலாத உணர்ச்சி
பல காலங்கள் கடந்து இன்று
பளிரென்று உறைகிறது.
முடியாதென்றால் முடி கூட பாரம் தான்.
இயலவில்லை என்றால் இமை கூட இமயம்தான்.
துன்பம் என்றால் தூசு கூட தூண்தான்.
முடியாதென்பதை முறியடித்தால்
முட்கள்கூட கிரீடம்தான்.
இயலும்மென்றால் இடர்கூட இன்பம்தான்,
துணிவிருந்தால் துயரம்கூட துரும்புதான்.
என் மனம் கேட்டது-
முயற்சிகள் செய்தால் முடியாதா!
SUPERB DEAR!!!!!!
ReplyDelete